இனிமையான மாலைப் பொழுதொன்றில் கதைக்களமே [ஆம் கதைசொல்லி வனிதாமணிஅருள்வேல் குடும்பமே] எம் இல்லம் நோக்கி வந்ததும்
காமராஜர் படிப்பகம் என்ற எம் தனியார் {சுமார் 30 வருடங்களாக சேகரித்த
நூல்களை} நூலகத்தை பார்வையிட்டதும் எம்பெரும்பேறு.
குடும்ப உறவுகளும், குடும்ப நண்பர்களும்
குழந்தைகளோடு வந்திருக்க, அவர்களோடு சேர்ந்து எம்மையும் குழந்தைகளாய் மாற்றிய கதைசொல்லி
வனிதாமணியின் கதையும் பாடலும் அற்புதம். .கதை கேட்க ஆசைப் பட்ட பெரியவர்களும் குழந்தைகளாய்
மாறிய மாயத்தருணமது. மகிழ்ச்சியும் உற்சாகமும் பகிரப்பட்டும் பன்மடங்காகியது.அன்
நிகழ்சிக்கு பிறகு ‘’மேதா குட்டி’’ என்னோடு ஐக்கியமாகி கதை கேட்டு இன்புற்றது தனிக்ததை. அன்பும் மகிழ்ச்சியும்
நன்றியும் வனிதாமணி அருள்வேல் குடும்பத்திற்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை எழுதவும்