திங்கள், 18 டிசம்பர், 2017

கதைக்களம் பட்டாம்பூச்சி குழந்தைகள் நூலகம் திண்டல்.

அந்தி சாயும்
இனிய ஞாயிறு[17/12/17]
மணியோ ஆறு,
இடமோ
கதைக்களம் பட்டாம்பூச்சி குழந்தைகள் நூலகம்
திண்டல்.
மூத்த‌கதைசொல்லியாக
கதைசொல்ல நல்வாய்ப்பை பெற்றேன்.

பட்டாம்பூச்சிகள் கேட்டறியாத கதையென நம்பி
ஒருஏத்துக்காரரும் மொட்டைகாக்கையும் கதையை
சொல்லத் தொடங்கினேன்,
பாதிக்கதை சொல்லும்போதே தெரிந்து போயிற்று
ஆஆகா!!இந்த பட்டாம்பூச்சி குழந்தைகள் ,
கதைகேட்பதில் மட்டுமல்ல, யூகித்து அறிவதிலும்
சுட்டிகள் என்று !!
நான் சொல்ல வந்த
மீதிகதையில்
பாதிக்கதையை
அவர்கள் வாயாலேயே
முன்சொல்லியது சிறப்பு!!.
கதைகேட்டறியாத
பெற்றோரும்
தம்குழந்தைகளுக்கு
தாமே தம் வீட்டில்
கதைசொல்லியாக
மாறி இருப்பதாக
சொன்னது
மட்டுமல்ல;
சின்னஞ்சிறிய
குழந்தைகளையும்
வண்ணத்து பூச்சிகளாக‌,
கதைசொல்லிகளாக‌,
ஓவியச்சித்தர்களாக‌,
உலாவ விட்டதும்
அற்புதம்.
கதைக்கள
பட்டரையில்
கூர்தீட்டிய‌
குழந்தைகள்
நாளை
அற்புதமான
மானுடம்
படைப்பார்கள்.
ஐயமில்லை
ஐயமில்லை
ஐயமென்பதில்லையே!!!.

அன்புடன்:கெ.கந்தசாமிபொங்கியம்மாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை எழுதவும்