சனி, 22 பிப்ரவரி, 2020

ரங்கராட்டினம் [MERRY GO ROUND]



ரங்கராட்டினம் இது ரங்கராட்டினம்
அப்பா அம்மா வாங்கி தந்த ரங்கராட்டினம்
               இது குடை  ராட்டினம்

விசை கொடுத்தால்  சுற்றிவரும் ரங்க ராட்டினம்
இது குடை  ராட்டினம் 
வண்ண வண்ண நிறங்கள் கொண்ட ரங்கராட்டினம்      
 இது தங்க ராட்டினம்
                                                                       
 
விசை முடிந்தால் நின்று போகும்   ரங்கராட்டினம்                              இது வண்ண ராட்டினம்
 
விசை முறுக்க யாரும் இல்லை ரங்கராட்டினம்
                      இது வண்ண ராட்டினம்
  
கால்களை ஆட்டிஆட்டி ஆடச்செய்வேன் ரங்கராட்டினம்
                                                               இது குடை ராட்டினம்

கொலுசு சத்த இனிமையோடு ஆட செய்குவேன் ரங்கராட்டினம்
                                                                          இது வண்ண ராட்டினம்

யாருமில்லா நேரத்திலே
                                                                       கால்களை  உதைத்து உதைத்து
ஆட‌ வைப்பேன்  
மகிழ்ராட்டினம்
                                                                            இது மகிழ் ராட்டினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை எழுதவும்