திங்கள், 30 டிசம்பர், 2019

சமூக குற்றவாளி உருவாக்கப் படுகிறான்

ஒரு மனச்சிதைவு நோயாளி சமூக
குற்றவாளியாக உருவாக்கப்  படுகிறான்.

நான்

இளம் குருத்தாக
இருக்கையில்
அண்டை அயலாரால்
கொஞ்சி  மகிழப்பட்டேன்


அன்பு என்பது
என்  பெற்றோர் இடத்தில் சிறிதும் இல்லை.
குறிப்பாக என் தந்தையிடம் அவர்
கட்டிக்காத்த சொத்துக்கு வாரிசாகவும்
வம்சவிருத்தி  யாகவுமே  வளர்க்கப்பட்டேன்.

எனக்கு சகோதர சகோதரிகளும் இல்லாததால்
அன்புக்கு ஒரு ஏக்கமே மிஞ்சியது.

படிப்பில் படு சுட்டியான என்னை
தந்தையின் அழுத்தமும் தாயின் அப்பாவித்தனமும்
போதைக்கு அடிமையாக்கியது.

அதற்கான முறையான சிகிச்சை இன்றியே
என் கல்லூரி வாழ்க்கையும்
இளமையும் தொலைந்தது.

இளமையில் வந்த
என் காதலும் முறியடிக்கப்பட்டது.

என் பெற்றோரின் ,
இந்த சமூக அமைப்பின்
தவறான,
பெண் குழந்தை பற்றிய   போதாமையான
புரிதலால்.

நான் சார்ந்த சமூகத்தில்,
திருமண வயது பெண்களின்
பற்றாக்குறையால், (மூடத்தனமான செயல்பாட்டால்)
என் பெற்றோருக்கு
அவர்களின்சமூக
அந்தஸ்துக்கு ஏற்ற
எந்த ஒரு திருமண பெண்ணும்
எனக்குக் கிடைக்காததால்.

ஜோசிய காரனிடமும்,
பேய், பில்லி சூனியக்
காரர்களிடமும்,
மூடநம்பிக்கையிலும்
மூழ்கி போயினர் அவர்கள்.

அந்தோ அவமான‌ பட்டவனாக
நானும் போதை
அடிமையில் வீழ்ந்தேன்.

பணம் தரும்
ஏடிஎம் இயந்திரமாகவே
என் தந்தை எனக்கு காணப்பட்டார்.

உணவுத் தேவைக்காகவே
அப்புராணி தாயும் பார்க்கப்பட்டார்.

எனது பணத்தேவை மறுக்கப்படும்
போதெல்லாம் அண்டை அயலாரிடம்
ரகலை அடிதடி என இறங்கினேன்.

சமூக கேவலத்திற்க்கு பயந்து
மூடிமறைத்த ஏடிஎம் எனக்கு பணம்  தந்தது.

என் நிலைமையை சமூகத்திற்கு
மூடிமறைத்து எனக்கு
ஒரு கால் கட்டு போட நினைத்தார்
என் ஏடிஎம்.
 
இதற்காக நாங்கள்
குடி மாறிய இடங்கள் ஏராளம்
ஆனால் அது நடக்கவில்லை.

என் காதல் ஏக்கமும் தீரவில்லை
உறவுகளும் என்னை புறக்கணித்தார்கள்.
என் பெற்றோருக்கும்
என்னைப்பற்றிய புரிதலோ
அக்கறையோ இன்மையால்.

போதையே எனக்குப் பாதை ஆகியது.
என் பாட்டன் பூட்டன் சொத்தை
குடித்தே அளிக்க நினைத்தேன்.

முடியவில்லை என்
அப்பனே எனக்கு தடை போட்டான்.

சமூகத்தில் அடிதடி ரகளை செய்து
என் அப்பன் மானத்தை வாங்கி
ஏடிஎம் பாஸ்வேர்டை புரிந்து கொண்டேன்.

அதனால் பொதுமக்களின் செல்போனை
பிடுங்கி உடைத்தேன் அடித்தேன்.

கேட்பாரில்லை ஏடிஎம் எனக்கு பணம் தரவில்லை.
வெறிகொண்டு ஒரு வாரமாய்
கத்தினேன் கதறினேன் ஆனால்
ஏடிஎம் கண்டுகொள்ளவில்லை.

வீட்டில் உள்ள பொருட்களை
உடைத்தேன் அதற்கும்
ஏடிஎம் மசியவில்லை.

வீதியில்
சென்ற பெண்களை தள்ளி உதைத்தேன்
ஏடிஎம் இயந்திரம் தெய்வச் செயல்,
பேய் ஆவி என‌கதை விட்டுதப்பிக்க பார்த்தது.

இந்நிலையில் சிறு குழந்தையின் சத்தமும்
எனக்கு கர்ண கொடூரமாக வெறியை ஊட்டியது.

எனது நிலை மறந்து கல்லால்  தாக்கினேன்.
ஏடிஎம் இயந்திரம் ஊமையாகிப் போனது.

அண்டை அயலார் களையும்
வெறி கொண்டு தாக்கி மண்டையை உடைத்தேன்
கையை முறிதேன்.

உடைத்தேன்  கார் கண்ணாடியை,
அப்போதும் ஏடிஎம் இயந்திரமான
என் அப்பாவுக்கு உரைக்கவில்லை.

இதில் என் குற்றம் எங்கு உள்ளது.
போதைக்கு அடிமையான
மனச்சிதைவு கொண்ட எனக்கு
முறையான வைத்தியம் பார்க்காத
உங்களையே (சமூக அமைப்பையே)
குற்றம் சாட்டுகிறேன்.

மருந்துக்கு கட்டுப்படாத
மனசிதைவு எனக்கு
எனில் கை காலில் விலங்கு
போட்டு பூட்டி  வைக்காத
உங்களை உங்களையே!
குற்றம் சாட்டுகிறேன்.

அல்லது என் மனம் போன போக்கில்
விளையாட விட்டுவிடுங்கள்
அரைகுறை வைத்தியம் தேவையில்லை.

இப்படிக்கு
பெற்றோரால் சரியாக,
வள‌ர்க்கப்படாத பரிதாபப்பட்ட,

       மனம்சிதைந்த‌ ஆத்மா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை எழுதவும்