ஒரு ஊரில் கருப்பன் கருப்பி என்ற தம்பதியருக்கு நீண்ட
நாட்களுக்குப் பிறகு ஆண்குழந்தை ஒன்று
பிறந்தது. அது கட்டைவிரல் அளவே இருக்கவே,
கருப்பனும் கருப்பியும் அக்குழந்தைக்கு கட்டைவிரல் பையன் என பெயர் வைத்து அன்புடன் வளர்த்து வந்தார்கள்
கட்டைவிரல் பையன் மிகவும் அபூர்வ சக்தி கொண்டவனாக
வளர்ந்து வந்தான்.கட்டைவிரல் பையனுக்கு 18 வயது பூர்த்தியடைந்தபோது, அவனுக்கு மணப்பெண்
தேடினாள் கருப்பி, எல்லோரும் அவளை பார்த்து கேலி பேசினார்களே ஒழிய, யாரும் பெண் கொடுக்க
முன்வரவில்லை. கட்டவிரல் பையன்
இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல், தான் மருதநாட்டு இளவரசி
மாங்கனியையே, திருமணம் செய்யப்போவதாக எல்லோரிடமும் கூறிவந்தான்.
மாங்கனியையே, திருமணம் செய்யப்போவதாக எல்லோரிடமும் கூறிவந்தான்.
மருத நாட்டு இளவரசியின்
தந்தை புஜபலனோ தன் மகளை பக்கத்து நாட்டு வயோதிகப் பேரரசர் பூசப்பனுக்கு மணம்
முடிக்க ஏற்பாடு செய்து வந்தார்.
மாங்கனிக்கோ, பேரரசர் பூசப்பனை சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனவே அரண்மனை வாழ்க்கையே கசப்பை தந்தது.
மாங்கனிக்கோ, பேரரசர் பூசப்பனை சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனவே அரண்மனை வாழ்க்கையே கசப்பை தந்தது.
இந்நிலையில் கட்டைவிரல் பையன் தன் தாயிடம் ‘’அம்மா நான் மருதநாட்டு இளவரசியையே
மணமுடிப்பேன், திருமண செலவுக்கு
உன்னிடம் உள்ள பணத்தை தா’’ என்றான்.
கருப்பியோ தன் மகனின்
தனித்தன்மையை தெரிந்தவள். எனவே, தன்னிடம் இருந்த ஒரு அணா நாணயத்தை கட்டைவிரல் பையனிடம்
கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு
சந்தைக்கு போனான் கட்டைவிரல் பையன்.
சந்தைக்கு போனான் கட்டைவிரல் பையன்.
முதலில் அரிசி கடைக்கு சென்று ‘’கடைக்காரரே, ஒரு அணாவிற்கு என்
வலதுகாது நிரம்ப
அரிசி தர முடியுமா?’’ எனக் கேட்டான். கடைக்காரருக்கு இவன் அதிசய மனிதனாய் தெரிந்ததால், ’’உன்காது நிரம்ப இலவசமாகவே அரிசி தருகிறேன்’’, எனக் கூறி கடை பையனை அழைத்து, கட்டைவிரல் பையனின் வலதுகாது நிரம்ப அரிசி போடும்படி கூறினார்.கடை பையனும் காதில் கொஞ்சம் அரிசியை போட்டான். அது காணாமல் போனது. பிறகு ஒரு படி அரிசி போட்டான். அதுவும் காணாமல் போகவே, பத்து படி போட்டான் அதுவும் பத்தாமல் போகவே, அதிசயப் பட்டவனாய் பத்து மூட்டையை எடுத்து கொட்டினான். காது நிரம்பிய பாட்டை காணோம்! கடைக்காரருக்கு மிகவும் ஆச்சரியமாயும், அதிர்ச்சியாகவும் போயிற்று. கட்டை விரல் பையனின் காதில், கடையில் உள்ள அரிசி முழுவதையும் கொட்டச் சொன்னார். பணியாளர்களும் எல்லாஅரிசி மூட்டையையும் கட்டை விரல் பையனின் வலது காதில் கொட்டினார்கள்.அரிசி காலியாயிற்றே தவிர, காது நிரம்ப காணோம். கடைக்காரர் கையை பிசைந்து கொண்டு, ’’இது என்ன காதா? இல்லை கருந்துளையா?’’ என்று வாய்விட்டு கதறி விட்டார். கட்டைவிரல் பையன் தன்னுடைய துண்டை எடுத்து வலது காதை அடைத்துக்கொண்டு அரிசி கடைக்காரரிடமும், சிப்பந்திகளிடமும் அடுத்த பௌர்ணமியில் மருதநாட்டு இளவரசி உடன், நடக்க இருக்கும் தன் திருமணத்தை காண வருமாறு அழைப்பு விடுத்தான்.

இவ்வாறே பருப்பு கடை
முதலாளியிடம் பேரம்பேசி , பருப்பு கடையில் இருந்த பருப்பு முழுவதையும் இடது காதில் வாங்கிக் கொண்டான். பிறகு தன் இடுப்பு வேட்டியை அவிழ்த்து இடது காதை அடைத்துக்கொண்டான். கடை முதலாளிகளுக்கு இந்தவாரம் அதிசய வாரமாகவே போயிற்று.

வீட்டிற்கு கால் சட்டையோடு வந்த கட்டைவிரல் கட்டைவிரல்
பையனை பார்த்து தாய் கருப்பி என்னவோ, ஏதோ என ஓடிவந்தாள். கட்டைவிரல்பையனோ, ‘’’ஒன்றும் பயப்படாதே அம்மா, ஓடிப்போய் மேற்கு வீ ட்டு நடையை திறந்து வை’’ என்று சொன்னான். அவளும் கதவை திறந்தாள். கட்டை விரல் பையன் உள்ளே
சென்று வலது காதில் இருந்த துண்டை உருவி காதை கீழே சாய்த்தான். என்ன ஆச்சரியம்! அந்த அறை முழுக்க
அரிசியால் நிரம்பியது. உடனே அருகிலிருந்த அறைக்குச் சென்ற கட்டைவிரல் பையன் இடது காதில் இருந்த
வேட்டியை உருவினான். அந்த அறை பருப்பால் நிரம்பியது.
இதேபோல்
திருமணத்திற்கு வேண்டிய அத்தனை ஏற்பாடு களையும் செய்து முடித்து விட்டு, தன் தாயிடமும்
தந்தையிடமும் ‘’அடுத்த பௌர்ணமி காலை 6 மணிக்கு எனக்கும்
மருதநாட்டு இளவரசிக்கும் நடக்கும் திருமணத்திற்கு பத்து பட்டி கிராமத்தையே அழைக்க
வேண்டும்’’ என்று கூறினான். 10 ஏக்கரில் திருமணபந்தல்
மட்டும் போடப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தன்னிடமிருந்த பேசும் கிளி மூலம், கட்டைவிரல் பையனை பற்றி
ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தாள் மாங்கனி.
கட்டைவிரல் கட்டைவிரல்
பையனையே மணம் முடிக்கவும் எண்ணினாள் .

பௌர்ணமிக்கு முதல் நாள்
கட்டைவிரல்பையனோ, சோளத்தட்டில் ஒரு வண்டி செய்து,
சுண்டெலியை
அதில் பூட்டி மருத நாட்டை நோக்கி சென்றான். பூமி அதிர சோளத்தட்டு வண்டி சென்றதைப் பார்த்து வழியிலிருந்த ஒரு நல்ல பாம்பு கேட்டது, ‘அண்ணா எங்கே செல்கிறீர்கள் ‘’.
அதில் பூட்டி மருத நாட்டை நோக்கி சென்றான். பூமி அதிர சோளத்தட்டு வண்டி சென்றதைப் பார்த்து வழியிலிருந்த ஒரு நல்ல பாம்பு கேட்டது, ‘அண்ணா எங்கே செல்கிறீர்கள் ‘’.
கட்டைவிரல் பையனை முந்திக்கொண்டு
சுண்டெலி சொன்னது,’’ ஓ அதுவா மருத நாட்டு இளவரசி மாங்கனியை அண்ணனுக்கு திருமணம் பேச
செல்கிறோம்’’ என்றது. ‘’நானும் வரட்டுமா?’’ என்று கேட்டது பாம்பு.
’’வந்து வண்டியில் ஏறிக்கொள்’’ என்றான் கட்டை விரல் பையன். பாம்பும் ஊர்ந்து வந்து சோளத்தட்டு வண்டியிலே ஏறிக்கொண்டது. சிறிது தூரம் சென்றதும் சோளத்தட்டு வண்டி வரும் ஆர்ப்பாட்டத்தை பார்த்து வழியிலிருந்த கருந்தேள் கேட்டது,
‘’அண்ணா எங்கே செல்கிறீர்கள்’’, பாம்பு முந்திக்கொண்டு பதில் சொன்னது ‘’மருதநாட்டு இளவரசி மாங்கனியை அண்ணனுக்கு திருமணம் பேச செல்கிறோம்’’ என்றது. ‘’அண்ணா நானும் வரட்டுமா’’ என கேட்டது கருந்தேள். ‘’வந்து வண்டியில் ஏறிக் கொள்’’ என்றான் கட்டைவிரல்பையன். கருந்தேளும் ஊர்ந்து வந்து சோளத்தட்டு வண்டியிலே ஏறிக்கொண்டது.

சிறிது தூரம் சென்றதும்
ஒரு
பட்டாம்பூச்சி ஆர்ப்பாட்டமாய் வரும் தட்டு வண்டியை பார்த்து வாய் பிளந்து நின்றது. பின் அது கேட்டது, ‘’அண்ணா எங்கே செல்கிறீர்கள் ‘’.
பட்டாம்பூச்சி ஆர்ப்பாட்டமாய் வரும் தட்டு வண்டியை பார்த்து வாய் பிளந்து நின்றது. பின் அது கேட்டது, ‘’அண்ணா எங்கே செல்கிறீர்கள் ‘’.
அப்போது கருந்தேள் பதில் சொல்லியது ‘’ஓ அதுவா மருதநாட்டு
இளவரசியை கட்டைவிரல் அண்ணனுக்கு திருமணம் செய்ய போகிறோமென்றது‘’.’’அண்ணா நானும் வரட்டுமா’’ என பட்டாம் பூச்சி கேட்கவும், ’’வந்து வண்டியில் ஏறிக்கோ’’ என்றான் கட்டைவிரல்
பையன். பட்டாம்பூச்சியும்
பறந்துவந்து வண்டியில் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டது. சிறிது தூரம் சென்றதும் கிளி
ஒன்று மரத்திலிருந்து பார்த்தது. ‘’அண்ணா எங்கே பயணம் என்றது’’. அதற்கு பட்டாம்பூச்சி
‘’மருத நாட்டு இளவரசியை அண்ணனுக்கு திருமணம் செய்ய போகிறோம்’’ என்றது.’’அண்ணா நானும் வரட்டுமா’’ என்றது கிளி.
‘’வந்து வண்டியில் ஏறிக் கொள்’’ என்றான் கட்டைவிரல் பையன். கிளி பறந்து வந்து தட்டு வண்டியில் அமர்ந்து கொண்டது.
‘’வந்து வண்டியில் ஏறிக் கொள்’’ என்றான் கட்டைவிரல் பையன். கிளி பறந்து வந்து தட்டு வண்டியில் அமர்ந்து கொண்டது.
இதுபோல் வழியில் தென்பட்ட பாறை ஒன்று ‘’அண்ணா எங்கே பயணம்’’ என்று கேட்கவே கிளி
சொல்லியது, ‘’மருத நாட்டு
இளவரசியை அண்ணனுக்கு திருமணம் செய்ய பெண்
கேட்க செல்கிறோம்’’.பாறையும், ‘’அண்ணா
நானும் வரட்டுமா’’ என்றது. ‘’ஓ தாராளமாக வந்து வண்டியில் ஏறிக் கொள்’’ என்றான் கட்டைவிரல் பையன். பாறையும் உருண்டு வந்து சோளத்தட்டு வண்டியிலே ஏறிக்கொண்டது. ஏழு பேரும் இரவு ஒன்பது மணி சுமாருக்கு மருத நாட்டு கோட்டையை வந்தடைந்தார்கள். கட்டைவிரல் பையன் உடனே கிளியை மருதநாட்டு இளவரயிடம் தூது அனுப்பினான். மருத நாட்டு இளவரசி மாங்கனியோ, எதற்கும் இறுதியாக தன் தந்தையிடம் பேசச் சொன்னாள். கிளியும் மருதாநாட்டு அரசன் புஜபலனிடம் ‘’கட்டைவிரல் அண்ணனுக்கு மருத நாட்டு இளவரசி மாங்கனியை பெண் கேட்டு வந்திருப்பதாக’’ கூறி, கட்டைவிரல் பையன் அருமை பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறியது. ஆனால் புஜபலனோ வீரர்களை அழைத்து,
‘‘கட்டைவிரல் பையனை எங்கு பார்த்தாலும் சிறை பிடியுங்கள்’’ என்று உத்தரவிட்டான். தன் தந்தை மீது இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் போயிற்று இளவரசி மாங்கனிக்கு.

கிளியும் நடந்த விவரத்தை கட்டைவிரல் பையனிடம்
கூறியது. பிறகு எழுவரும் கூடி, ஆலோசனை செய்து, மாங்கனியை தூக்கிவர திட்டமிட்டார்கள். அதன்படி பட்டாம்பூச்சி
ராணியின் படுக்கையறைக்கு சென்று, அங்கிருந்தவிளக்குகளை தன் இறக்கையால் வீசி வீசி அணைத்தது. விளக்கை
பற்ற வைக்க தீப்பெட்டியை எடுத்தாள் ராணி. அங்கு மறைந்திருந்த கருந்தேள் ராணியை பதம் பார்த்தது. ராணி ஓ…. என கதறினாள்.
இதைக் கேட்ட அரசன் புஜபலன் தன் அறையை விட்டு வெளியே ஓடிவந்தான். அப்போது அங்கு மறைந்திருந்த நல்ல பாம்பு அரசனை போலியாக ஒரு போடு போட்டது. அரண்டு போய் மயக்கம் போட்டு விட்டான் அரசன். இதைப்பார்த்த திருமண பந்தலில் இருந்த உறவினர்களும் வீரர்களும் ஓடி வரவே,
அந்நேரம் பார்த்து பாறை திருமணப் பந்தலின் காலை உடைத்து விட்டது திருமணப் பந்தல் அனைவரையும் வைத்து அழுத்திக் கொண்டது.
இதுதான் நல்ல நேரம் என்று,கட்டைவிரல் பையனும் இளவரசி மாங்கனியை
அழைத்துக்கொண்டு தன் தோழர்களோடு தட்டுவண்டியில் புறப்பட்டான். சுண்டெலி அனைவரையும்
இழுத்துச் சென்றது. தன் கிராமத்தை அடைந்தான் கட்டைவிரல் பையன்.
தன் கிராமத்தில் [முன்பே ஏற்பாடு செய்திருந்தபடி] போடப்பட்டிருந்த திருமண பந்தலில், மக்கள் அனைவரும் , மருத நாட்டு இளவரசி மாங்கனிக்கும், கட்டைவிரல் பையனுக்கும் நடக்கும் திருமணத்தை காண வந்திருந்தார்கள்.
திருமண மேடைக்கு வந்த கட்டைவிரல்பையன் அனைவருக்கும் வணக்கம்
கூறி, மருத நட்டு இளவரசி
மாங்கனியை அறிமுகப்படுத்தினான்.
பின்பு திருமணமும் செய்துகொண்டான்.
பின்பு திருமணமும் செய்துகொண்டான்.
அரிசி கடை முதலாளிக்கும் பருப்பு கடை முதலாளிக்கும், முதல் வரிசையிலேயே இடம்
கிடைத்தது. அவர்களும்சந்தோசமாக
மணமக்களை வாழ்த்தி பின் விருந்து சாப்பிட எழுந்து சென்றார்கள்.
மருத நாட்டு இளவரசி மாங்கனியும்
கட்டைவிரல்பையனும் நீண்ட நாட்கள்
மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள்.
[சுமார்
50
வருடங்களுக்கு
முன்பு எனது அம்மா கூறியகதை]14.10.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை எழுதவும்