30.
6. 2019 நூல் தளம் விழாவில்
பின்னணிப் பாடகர் கிராமியக் கலைஞர் திரு சுந்தரையர்
அவர்கள் பாடிய {அனைவரையும் பாட வைத்த}
நினைவில் நின்ற
அம்மாவ வாங்க முடியுமா ? பாடல்.
அம்மாவ வாங்க முடியுமா ?
ஆசைப்பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ
வாங்க முடியுமா ?
நீ..யும்அம்மாவ
வாங்க முடியுமா?
உனக்கு
எனக்கு அம்மா ஒருத்தி தானடா!
தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா!
ஆசைப்பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ
வாங்க முடியுமா ?
நீ..யும்அம்மாவ
வாங்க முடியுமா?
பட்டினிய
கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால்
குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி மறப்பா
பட்டினிய
கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால்
குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி மறப்பா
கட்டெறும்பு
உன்ன கடிச்சா கட்டிகிட்டு அவ முழிப்பா
கட்டெறும்பு
உன்ன கடிச்சா கட்டிகிட்டு அவ முழிப்பா
பெத்தவளுக்கு
கைமாறு தான் பிள்ளை என்ன செய்திடுவான்
பெத்தவளுக்கு
கைமாறு தான் பிள்ளை என்ன செய்திடுவான்.
உனக்கு
எனக்கு அம்மா ஒருத்தி தானடா!
தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா!
இளவட்டம்
ஆனாலும் எண்ண தேச்சி குளிக்க வைப்பா
ஏமாற்றும்
நம்மள நம்பி இதயத்தை கொடுத்து வைப்பா!
இளவட்டம்
ஆனாலும் எண்ண தேச்சி குளிக்க வைப்பா
ஏமாற்றும்
நம்மள நம்பி இதயத்தை கொடுத்து வைப்பா!
நெஞ்சிலே
நடக்க வைப்பா நிலாவை புடிக்க வைப்பா!
நெஞ்சிலே
நடக்க வைப்பா நிலாவை புடிக்க வைப்பா !
பிஞ்சு
விரலில் நகம் கடிப்பா பேச சொல்லி சிரி
சிரிப்பா!
பிஞ்சு
விரலில் நகம் கடிப்பா பேச சொல்லி சிரி
சிரிப்பா!
உனக்கு
எனக்கு அம்மா ஒருத்தி தானடா!
தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா!
ஆசைப்பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ
வாங்க முடியுமா ?
நீ..யும்அம்மாவ
வாங்க முடியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை எழுதவும்