[30. 6.
2019 நூல் தளம்
விழாவில்
பின்னணிப் பாடகர் கிராமியக் கலைஞர்
திரு சுந்தரையர்
அவர்கள் பாடிய {அனைவரையும் பாட வைத்த}
கத்தரிக்காய் பாடல்
ஒலி வடிவில் {mp3} வேண்டுவோர்
தனி செய்தியில் கேட்கவும்.]
கத்தரிக்காய் பாடல்
கத்துக் கொடுத்தது யாரு?
கடலைக் கொட்டைக்கு
முத்து சிப்பி போல
மூடி வெச்சது யாரு?
பூசணி தலையில்
பூவை அழகாய்
முடிஞ்சு வெச்சது யாரு?
காகிதப் பூவிற்கு
அழகழகாய்
வண்ண மடித்தது
யாரு? யாரு? யாரு?
காரணம் தெரிஞ்சா
பருத்திச் செடிக்கு
பஞ்சுமிட்டாயை
தின்னக் கொடுத்தது யாரு?
பனை ஓலைக்குள்ளே
காத்த நெறச்சு
மறச்சு வெச்சது யாரு?
ஆலமரத்துக்கு
அத்தனை உஞ்சலை
ஆடக் கொடுத்தது யாரு ?
ஆற்றில் குளிக்காத மல்லிகை பூவுக்கு
அத்தனை வெண்மை
ஏது?
ஏது?
ஏது?
சூரியனையே
திரும்பிப்பார்க்கும்
சூரியகாந்தியை பாரு!
அந்த தொட்டாசினுங்கிய
பட்டுனு மூடிக்க
கட்டளை போட்டது யாரு?
தாமரைத்தண்டுக்கு நீந்த தெரியாது
தண்ணியில் நிக்குது பாரு?
தாவி மரத்தில் ஏறும்
கொடிக்கு
காலு இருக்குதா
பாரு..?
பாரு..?
பாரு..?
காரணம் தெரிந்தால்
கிடைப்பதெல்லாம் அழகு!
கிடைப்பதெல்லாம் அழகு!
இடையில் வந்த மனிதனாலே
விளையுது ரொம்ப அழிவு
அழிவிலிருந்து ஆக்கம்
காண்போம்
அன்பு கொண்டு பழகு !
அன்பு கொண்டு பழகு!
தெளிவுடைய சிந்தனையால்
வாழும் இந்த உலகு!
[கத்தரிக்காய்க்கு…………]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை எழுதவும்