30. 6. 2019 நூல் தளம் விழாவில்,
பெரிய புலியூரில் இருந்து வந்த
திரு. மாதேஷ் அவர்களின்
இயற்கையை போற்றும் பாடல்.
சின்னஞ்சிறு சிட்டுகளே!
பெரிய புலியூரில் இருந்து வந்த
திரு. மாதேஷ் அவர்களின்
இயற்கையை போற்றும் பாடல்.
தந்தன தந்தன, தந்தன தந்தன,
தந்தன தனனனா,
தந்தன
தந்தன, தந்தன தந்தன ,
தந்தன
தனனனா,
உச்சியின் மலையிலே
ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது
உயர்வும் தாழ்வும்
வளர்க்குது
ஓங்கிவரும் மூங்கில்
மரங்கள்
ஒன்னையே ஒன்னு
புடிச்சிருக்கு!
ஓங்கிவரும் மூங்கில்
மரங்கள்
ஒன்னையே ஒன் னு புடிச்சிருக்கு!
ஒழுங்காக குருத்துவிட்டு
கிளைகளையா
வெடிச்சிருக்கு ! அது
ஒழுங்காக குருத்துவிட்டு
கிளைகளையா வெடிச்சிருக்கு!
ஒட்டாம ஒதுங்கி நின்னா
உயர முடியுமா? எதிலும்
ஒற்றுமை கலைந்ததுனா
வளர முடியுமா? -மரங்கள்
வளர முடியுமா?
[தந்தன தந்தன,..]
விண்ணும் மண்ணும்
நீயானால்!
வெயிலும் மழையும்
நீயாவாய்!
விண்ணும் மண்ணும்
நீயானால்!
வெயிலும் மழையும்
நீயாவாய்!
விளங்கும் அகில உலகம்
இது
சின்னஞ்சிறு சிட்டுகளே!
சிங்காரப் பறவைகளே!
சின்னஞ்சிறு சிட்டுகளே!
சிங்காரப் பறவைகளே!
சிவந்த மூக்கு பச்சை கிளிகளே!
ஓடிவாங்க ஒன்றாய் கூடி வாங்க!
ஓடி வாங்க ஒன்றாய் கூடி வாங்க!
பச்சை
மலைச் சாரலிலே!
பனி
உறங்கும் பாறையிலே!
பச்சை
மலைச் சாரலிலே!
பனி
உறங்கும் பாறையிலே!
படி போல
பறவை யெல்லாம்
பறந்து
வந்து ஒன்றாய் கூடுதே!
பறந்து
வந்து ஒன்றாய் கூடுதே!
மீனும்
தேனும் மேயுதே!
ஆனந்தமாய் மனிதனின் கண்கள்
அவரை நாடி
போகுதே!
அவரை நாடி
போகுதே!
உயரத்திலே பறந்து திரியும் பறவை கூட
ஒரே மரத்தில் குடியிருக்கும்
உயரத்திலே பறந்து திரியும் பறவை கூட
இரவினிலே உணவைத் தேடும் வௌவால்கள்
அதே மரத்தில் குடியிருக்கும்!
இரவினிலே உணவைத் தேடும் வௌவால்கள்
அதே மரத்தில் குடியிருக்கும்!
பிரிவினை தூண்டும் மனிதர் மட்டும்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது
ஒற்றுமை இன்றி தவிக்கிது!.
[தந்தன தந்தன,..]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை எழுதவும்