புதன், 20 பிப்ரவரி, 2019

நரியும் பன்றியும்


   நரியும் கொழுத்த பன்றி ஒன்றும்  ஒரு காட்டில்  வசித்து  வந்தன.  
எப்படியாவது பன்றியை கொன்று தின்றுவிட வேண்டும்  என  ஆசை
பட்டது நரி. ஆகவே பன்றியுடன் அன்பாக இருப்பது போல் பழகியது,
ஒரு  நாள், “பன்றி அண்ணா நான் பக்கத்து காட்டில் உணவு  தேடச்
செல்கிறேன் நீயும் வாயேன் நல்ல கிழங்கு கிடைக்கும் என்றது நரி .
சரி என்று பன்றியும் நரியுடன் புறப்பட்டது   பாதி வழியில் தண்ணீர்
தாகமாக இருந்தது நரி வழியில் கிடைத்த   கடலைக்காய் ஒன்றை
எடுத்து வாயில் போட்டு "கடக்கென" கடித்த‌து "என்ன சாப்பிடுகிறாய்"
என்று கேட்டது பன்றி, ‘’தண்ணீர் தாகமாக இருந்ததா அதனால்  எனது
ஒரு கண்ணை பிடுங்கி தின்று விட்டேன்’’ என்றது நரி. முட்டாள் பன்றி
யும் தாகமாக இருக்கவே தன் ஒரு கண்ணை பிடுங்கி தின்றது. சிறிது
தூரம் சென்றதும் நரி மீண்டும் ஒரு நிலக்கடலையை எடுத்து வாயில்
போட்டு "கடக்கென"கடித்தது இம்முறையும் பன்றி கேட்டது என்ன  நரியாரே சாப்பிடுகிறாய்" தண்ணீர் தாகம் அதிகமாக  இருந்ததால் இம்
முறை மறு கண்ணையும் பிடுங்கி தின்று விட்டேன் என்றது . இதை
உண்மை என நம்பி தன் மறு கண்ணையும் பிடுங்கித்தின்று விட்டது பன்றி.
ஆனால் தண்ணீர் தாகம் மட்டும் அடங்கவில்லை.இப்போது பன்றிக்கு
சுத்தமாக வழியும் தெரியவில்லை. நரி சொல்லியது "பன்றி அண்ணா
என் பின்னாடியே வா நான் வழி காட்டுகிறேன்" என்றது. பிறகு ஒரு
பாழடைந்த கிணற்றின் அருகில் கூட்டிச்சென்று பன்றி அண்ணா இங்கு
ஒரு கிணறு இருக்கும் போல் உள்ளது. முதலில் நான் கிணற்றில் குதித்து
தண்ணீர் குடிக்கிறேன், என் பின்னாடியே நீயும் குதி என்றது. பிறகு ஒரு
பெரிய கல்லை தூக்கி தொப்பென கிணற்றுக்குள் போட்டது. பன்றியும்
நரி குதித்துவிட்டது என எண்ணி அதுவும் குதித்தது. பன்றி நன்றாக
புதை சேற்றில் மாட்டிக் கொண்டது. உடனே நரி சற்று தூரமான காட்டில்
நிலக்கடலை பிடுங்கிக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து
"ஏய் கடலைகாய் பறிக்கும் மக்களே
ஏய் கடலைகாய் பறிக்கும் மக்களே
ஒரு குருட்டு பன்றி கிணற்றில் விழுந்து விட்டது" என்று சத்தமிட்டபடியே
ஓடியது. அந்த மக்களும் "ஆஹா இன்று நல்ல வேட்டை என எண்ணி
அந்த பன்றியை கொன்று விருந்து சமைத்தார்கள்.பின்புசமைத்த
 பன்றி கறியை வாழை இலை போட்டு சாப்பிட அமர்ந்தார்கள்.
அந்த நேரம் பார்த்து நரி அவர்கள்  போட்டிருந்த கடலைகொடி போரில்
 
தீ வைத்து விட்டது, தீயும் பற்றி எரிந்தது, உடனே   
   நரி, பன்றி கறி
சாப்பிடும் மக்களைப் பார்த்து 
"ஏய் பன்றி கறி தின்பவர்களே,
"ஏய் பன்றி கறி தின்பவர்களே,
கடலைக்கொடியில் தீ பிடித்து கொண்டு விட்டது என்று கத்தியது. பன்றி
கறி தின்ன அமர்ந்த மக்கள் யாவரும் தீயை அணைக்க ஓடினார்கள்.  
அந்நேரம் பார்த்து அங்கு வந்த நரியும் பன்றிக்கறியை சாப்பிட்டுவிட்டு
ஓடிப் போனது.
 
[சுமார் 50 வருடங்களுக்கு முன்பு என் தாயார் அடிக்கடி சொல்ல கேட்ட  கதை இது  [18.2.19]    அன்புடன் :    கெ.கந்தசாமிபொங்கியம்மாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை எழுதவும்