முன்னொரு காலத்தில் குரும்பை புலவர் என்று ஒரு
புலவர்
வாழ்ந்து வந்தார்.
மற்ற புலவர்கள்
எல்லாம் அந்நாட்டு
மன்னரைப் பார்த்து
அவரைப் பற்றி புகழ்ந்து பாடி பரிசுகள்
பெற்று
வந்தார்கள்.குரும்பை புலவருக்கோ ஒரு வரி பாடலும்
ஒழுங்காக எழுத வராது,இதில் எங்கே மன்னரைப் புகழ்ந்து
புலவரை நாள்தோறும்
நல்ல அர்ச்சனை செய்து வந்தார் .
ஒரு நாள், "ஊரில் உள்ள புலவர்கள் எல்லாம் நல்ல
பாட்டு எழுதி
மன்னரிடம் பரிசு பெற்று வருகிறார்கள் ,
நீங்களும்
இருக்கிறீர்களே திண்ணைக்கு கேடாக " என்று
கேவலமாக பேசி
விட்டாள். தன்மானம் தலைக்கேறி விட்டது
புலவருக்கு, ஓலைச் சுவடியையும், எழுத்தாணியையும் எடுத்
ஒரு கோபத்தில்
கிளம்பிவிட்டாரே தவிர, ஒரு
வரி பாடலும் வந்து
தொலைக்க மாட்டேன்
என்றது. அப்போது எதிரே ஒரு புலவர்
மன்னரைப் புகழ்ந்து
பாடி பரிசுகள் பெற்று கொண்டு வந்து
கொண்டிருந்தார். புலவர் அவரிடம் போய், "ஐயா நானும் மன்
னரைப் பற்றி பாடி
பரிசுகள் வாங்க வேண்டும்.
எனக்கு பாடல்
புலவருக்கோ குறும்பை
புலவரின் தோற்றத்தைப் பார்க்க நகைப்
பாக இருந்தது. அவரும் இவரிடம் நையாண்டியாக "என்ன பெரிய
பாடல் வீதியில்
பார்க்கும், கேட்கும்
நிகழ்ச்சியை எல்லாம் ஒரு
ஏட்டில் எழுது பாடல், தானே வந்துவிடப்போகிறது, இது
கூட தெரி
யாதா" என்று
கூறிச் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். அதையே
குரும்பைப் புலவரும்
வேதவாக்காக எடுத்துக் கொண்டார்.சரி என்று
அரண்மனையை நோக்கி
பயணத்தைத் தொடர்ந்தார் அப்போது ,
ஓடி மறைந்தது.
திடுக்கிட்ட குரும்பை புலவர் பின் சுதாரித்துக்
கொண்டு ஏட்டை எடுத்து
முதல் வரியை "மண்ணுழுவி" என்று
எழுத ஆரம்பித்தார்.
பிறகு சிறிது தூரத்தில் சிறுவர் சிறுமிகள்
மரப்பாச்சி பொம்மையை
வைத்து விளையாடிக்கொண்டிருந்ததைக்
பார்த்து எதிரே ஒரு
குழந்தையை தூக்கிக்கொண்டு முதியவர் ஒருவர்
தள்ளாடியபடியே நடந்து
வந்தார். அவர் தலைக்கு மேலே காகம் ஒன்று
குயில் கூ கூ என
கூவியது, இது போதாதா நம் புலவருக்கு. உடனே
ஏட்டை எடுத்து “பிள்ளை எடுக்கும்
பெருங்கிழவா கா இரையும் கூ
இரையும்" என எழுதினார்.பின் அரண்மனையை நோக்கிச் சென்றார்.
சிறிது தூரம் சென்ற
போது இரண்டு பெண்கள் சத்தமாக சண்டை
போட்டுக்
கொண்டிருந்தார்கள், அதில் ஒருத்தி கோபமாக உங்க அப்பன்
தான் திருடன் என
கத்தினாள். நம் புலவருக்கு அவர்கள் சண்டையை
பற்றியெல்லாம் ஒரு
பஞ்சாயத்தும் தேவையில்லை ஆகவே ஏட்டை எடுத்து
"உங்கப்பன்" என எழுதினார், அப்போது பார்த்து பெருச்சாளி ஒன்று
பெருச்சாளி” என
பாடல் வரியை தொடர்ந்து எழுதினார்.
அரண்மனைக்கு பக்
கமாக வரும்போது ஒரு
மரத்தில் கட்டி இருந்த காளை மாடு ஒன்று தனது
கொம்பால் மரத்தில் கூர்
தீட்டியவாறு முறைத்துப் பார்த்தது. உண்மையிலேயே
காளை எங்கே தன்னை
முட்டி விடுமோ என பயந்துதான் போய்விட்டார்.
ஆனால் கயிற்றால் கட்டி இருந்த
தைரியத்தில், "தீட்டுற
தீட்டும் பார்க்
அரண்மனைக்குச் சென்று
வாயில் காவலனிடம் அரசரைப் பற்றி கவிதை
எழுதி வந்துள்ளேன், அரசரைப் பார்த்து படித்துக்காட்ட வேண்டும் என்று
சொன்னார். வாயிற்காப்பான்
வேறு ஒரு காவலாளியிடம், உடனே
புலவரை
செய்ய
அமர்ந்திருந்தார். அவருக்கு சவரம் என்ன பெரிய விஷயமா? "புலவரே
நீர் உம் கவிதையை
பாடும்’’ என்று கூறினார். காவலாளியையும், புலவரையும்
பார்த்து 'திடுக்கிட்ட' சவரத் தொழிலாளி, மன்ன ருக்கு சவரம் செய்வதை
நிறுத்திவிட்டு
தன்னிடம் இருந்த சவரக்கத்தியை இப்படியும் அப்படியும் தீட்டி
நேரம்
கடத்தினார்.புலவரும் தன் ஓலைச்சுவடியை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.
"மண்ணுழுவி
மரப்பாவை
பிள்ளை எடுக்கும்
பெருங்கிழவா
கா இறையும்! கூ இறையும்!
உங்கப்பன் கோவில்
பெருச்சாளி
தீட்டுற தீட்டும்!
பார்க்கிற பார்வையும்!
தெரியும்
தெரியும்".
என பாடி முடித்தார்.
கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்த சவரத் தொழிலாளி,
மன்னரின் காலில் 'தொப்பென' விழுந்து "மன்னா!என்னை மன்னித்து
உடனே ஓடிவந்து சவரத்
தொழிலாளியை தூக்கி நிறுத்தி என்ன ஏது என்று
விசாரித்தார்கள்
அதற்கு அவன், "ஐயா
நான் பக்கத்து நாட்டு ராஜாவின்
சூழ்ச்சிக்கு பலியாகி
மன்னருக்கு சவரம் செய்யும் போது,
கத்தியால் கழுத்தை
அறுத்துக் கொல்ல
திட்டமிட்டேன், இதை
எப்படியோ தெரிந்து கொண்ட
புலவரும், கவிபாடி புரிய வைத்துவிட்டார், என்னை மன்னித்து
விடுங்கள்
மன்னா" என மன்றாடினான் மன்னருக்கு விஷயம் புரிந்து
போயிற்று, சவரத் தொழிலாளியை பிடித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இப்போதெல்லாம் குரும்பை புலவரின் மனைவி அவரை
தலையில் தூக்கி
வைத்து ஆடாத குறைதான்
போங்கள்.
=========== =
சுமார் 48 வருடங்களுக்கு முன்பாக ஆசிரியர் ஒருவர் சொல்ல
கேட்ட கதை இது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை எழுதவும்