ஞாயிறு, 30 ஜூன், 2019

30 .6 .2019 நூல் தளம் பற்றிய எனது அனுபவம்.



  வண்டை பூக்கள் ஈர்ப்பது வியப்பில்லை. அழகழகாக,
நூற்றுக்கணக்கான வண்ணமயமான,
 தேர்ந்தெடுத்த புத்தகங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன‌.

அதில் எனக்கு பிடித்த நான்கு நூல்களை பில்போட‌
கையில் எடுத்து வைத்திருந்தேன்.
''தாத்தா எடுத்த இடத்திலேயே வச்சிருங்க'' என்று
 அன்பான அதிகாரக் குரல் கேட்டது.
பார்த்தால் மகிழ்.
நிஷாந்த் இடம் பேசிய பிறகுதான் தெரிந்தது, இது பார்வை நேரம் ,
விற்பனை இறுதியில் தான் என்பது .
மகிழ் பாப்பாவிடம் நான் கூறிய பொய்யை கூட கண்டுபிடித்து அதை
தமாசாக மாற்றிய புன்னகை முகம் இன்னும் நினைவில் ஓடுகிறது.

நூல் தளம் விழா நடக்கும் மொட்டை மாடியிலோ ஒரே மழை,
ஆம், நிகழ்ச்சியின்  ஆரம்பத்தில் இருந்து,முடிவுவரை
இடைஇடையேயும்
[சென்னையிலிருந்து வந்திருந்த தேசிய விருது பெற்ற
பின்னணி பாடகர் கிராமியக் கலைஞர் ]
திரு. சுந்தரையர், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் இசை மழையில் நனைத்து விட்டார். கத்தரிக்காயை எடுத்து குடையாய் பிடிக்காத குறை தான் போங்கள்.மகிழ்சியும்,நன்றியும் திரு சுந்தரையர் அவர்களே .
சிறப்பு விருந்தினராக முதலில், அரச்சலூர், அகஸ்திய
அகடாமியின்தாளாளரும்,ராஜேந்திரா பள்ளியின் நிர்வாக இயக்குனருமான,
திருமதி வித்யாசெந்தில்அவர்கள் பேச அழைக்கப்பட்டார்.
மூன்று வயதிலேயே தன் மூத்த மகனுக்கு கதைகள் சொல்லி
தூங்க வைத்த நிகழ்வைச் சொல்லி நம்மை நெகிழ வைத்தார்.
சிறந்த உரை, நன்றி திருமதி வித்யாசெந்தில் அவர்களே.
  அடுத்துப் பேச வந்தார்,பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல்
பள்ளியின் முதல்வர் ,திருமதி ராதா மனோகரன் அவர்கள்
அவர் குழந்தையோடு குழந்தையாக மாறி முதல் கடவுள்
அம்மா அப்பாவே  என புரிய வைத்த விதம் அற்புதம் .
நன்றி திருமதி ராதா மனோகரன் அவர்களே.
       முத்தாய்ப்பாக பேச வந்தார்.
ஈரோடு, மகளிர் கல்லூரி ,
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையைச் சேர்ந்த,
திரு ஸ்டீபன் தங்கராஜ் ஐயா அவர்கள். ஒரு உண்மையின்
மறுபக்கத்தை காண வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை
அவர் பேச்சு புரிய வைத்தது. ஒரு கதையைக் கூறி நாமே
நமக்கான நீதியை தேடிக் கொள்ளும் படி கூறிச் சென்றது அருமை.
நன்றி திரு ஸ்டீபன் தங்கராஜ் அவர்களே.
நிகழ்ச்சியின் இடையே பெரிய புலியூரில் இருந்து வந்த
திரு. மாதேஷ் அவர்களின் இசை ஞானம் அனைவரையும்
மலை காட்டுக்கு அழைத்துச் சென்றது.
இனி அனைவரின் வாயும் நீண்ட நாட்களுக்கு,
தந்தன தந்தன, தந்தன தந்தன,
 தந்தன தனநனனா 
 என்ற மெட்டை முணுமுணுக்கும்.
 நன்றி திரு. மாதேஸ் அவர்களே.
இறுதியாக நன்றியுரை கூற வந்த  மன்னிக்கவும் அன்பு உறை கூற வந்த
திருமதி வனிதாமணி அருள் அவர்கள், அமிழ்து நூல் டிசைனர் திரு ராமகிருஷ்ணன்
அவர்களை அறிமுகம் செய்தார். அவர் ஆடிய விளையாட்டில் குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து மகிழ்ந்தார்கள்.
நன்றி திரு ராமகிருஷ்ணன் அவர்களே .
திருமதி வனிதாமணி அருள் அவர்களின் அன்பு உரையுடனும் வடை,டீயுடனும் நூல் தளம் நிகழ்வு இனிதேநிறைவுற்றது. அதேநேரம் நூல்தள விற்பனையும் சூடு பிடித்தது. .வந்திருந்த அனைவருக்கும் மணி பர்ஸ் மற்றும் துணிப்பை  அன்பளிப்பாக கொடுத்தது சிறப்பு. மணி பர்சை துணிப் பை யாக  
மாற்றும் விதம் அற்புதம்.
 இனி கடைகளுக்கு மணிபர்சை கொண்டு சென்று
துணிப்பையில் பொருட்கள் வாங்கி வரலாம். மிக அற்புதம் ,நன்றி திரு அருள்வேல் வனிதாமணி குடும்பத்திற்கு.
மொத்தத்தில்  அன்றைய மாலைப் பொழுது சுந்தரையர் பாடியபடி பொன்மாலைப்பொழுதாகவே அமைந்தது.
நூல் தளம் நிகழ்சிச்யை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த கதைக்கள குழந்தைகளுக்கும்,பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.
கதைக்களமும் நூல் தளமும் மேலும் சிறக்கவும்  வாழ்த்துக்கள். 
அன்புடன் : கந்த‌சமிசாந்தி





































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை எழுதவும்